மேலும்

54 ஆயிரம் சிறிலங்கா படையினர் தப்பியோட்டம்

சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 54,087 அதிகாரிகள் மற்றும் படையினர்,  விடுப்பு எடுக்காமல் சேவையை விட்டு வெளியேறியுள்ளனர் அல்லது தப்பிச் சென்றுள்ளனர் என  பாதுகாப்பு பிரதி அமைச்சர்  மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லெப்டினன்ட் கொமாண்டர் பிரகீத் மதுரங்கவின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில். அவர் இந்த விபரத்தை வெளியிட்டார்.

இராணுவத்தில், 385 அதிகாரிகளும் 47,265 படையினரும்,  விடுப்பு இல்லாமல் பணிக்கு சமூகமளிக்கத் தவறியுள்ளனர்.

மேலும், 232 அதிகாரிகளும் 93 படையினரும்,  தற்போது விடுப்பு இல்லாமல் வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்.

கடற்படையைப் பொறுத்தவரை, 87 அதிகாரிகளும் 3,108 படையினரும்,  தற்போது பணியில் இல்லை.

அதேவேளை கடற்படையை சேர்ந்த 64 அதிகாரிகளும், 19 ஏனைய தரத்தினரும், விடுமுறை பெறாமல் வெளிநாட்டில் உள்ளனர்.

விமானப்படையில், 46 அதிகாரிகளும் 3,396 படையினரும்,  பணிக்கு சமூகமளிக்கவில்லை.

அதே நேரத்தில் 15 அதிகாரிகளும் 5 படையினரும்  விடுப்பு இல்லாமல் வெளிநாட்டில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *