மேலும்

Tag Archives: வர்த்தமானி

93 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று வேட்புமனுக்கள் கோரப்படும்

சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ளாத சாவகச்சேரி நகரசபை உள்ளிட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களுக்கு வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு இன்று வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூராட்சி சபைகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய வர்த்தமானி வெளியானது

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலில் மீண்டும் இழுபறி

நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேசசபையை உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறியினால், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தவறிழைத்த படையினரே நீதிமன்றம் செல்ல நேரிடும் – சந்திரிகா

காணாமற்போனோர் தொடர்பான பணியகம், அமைக்கப்படுவது சிறிலங்கா படையினரை அனைவரையும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்காக அல்ல என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், தற்போது, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான பணியகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அதிபர் ஆணைக்குழுவின் அதிகாரங்கள் அதிகரிப்பு

பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும், அதிபர் ஆணைக்குழுவுக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த முதலாம் நாள் வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் மார்ச்சில் நடக்காது

உள்ளூராட்சித் தேர்தல்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் மார்ச் மாதம் நடத்தப்படாது என்னும், எனினும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

சிறிலங்காவில் ஓகஸ்ட் 17இல் நாடாளுமன்றத் தேர்தல் – 10 நாட்களில் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

சிறிலங்காவின் ஏழாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ள நிலையில், எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஓகஸ்ட் 17ம் நாள்- திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – நள்ளிரவில் வெளியாகிறது வர்த்தமானி அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 30இற்குப் பின்னர் நாடாளுமன்றம் வருகிறது 20ஆவது திருத்தச்சட்டம்

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச் சட்டமூலம், இம்மாதம் 30ஆம் நாளுக்குப் பின்னர், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

20ஆவது திருத்தம் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டது

தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான யோசனை, நேற்று நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்க அச்சகர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.