பின்னணியில் இந்தியா இருந்ததாக கூறவேயில்லை- ரவி செனவிரத்ன மறுப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருந்தது என தாம் கூறியதாக வெளியான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மறுத்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருந்தது என தாம் கூறியதாக வெளியான தகவல்களை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மறுத்துள்ளார்.
உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழுவின் அமர்வின் போது கூறப்படாத கருத்துக்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறப்படும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் எச்சரித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் முக்கிய சூழ்ச்சியாளரை கண்டுபிடித்து விட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வெளியிட்ட எக்ஸ் பதிவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர், நிலந்த ஜயவர்த்தனவை, சிறிலங்கா காவல்துறை சேவையில் இருந்து நீக்கும் முடிவு நியாயமற்றது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஷானி அபேசேகரவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவோ, ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவோ நியமிக்குமாறு, பேராயர் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் குறிப்பிட்டுக் கோரவில்லை என்று தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற சிறிலங்கா காவல்துறை அதிகாரிகளான ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் பேராயர் மல்கம் ரஞ்சித்தின் வேண்டுகோளின் பேரிலேயே மீண்டும் சேவைக்கு அழைத்து வரப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.