ரவி, ஷானி நியமனங்களை பேராயர் குறிப்பிட்டுக் கோரவில்லை
ஷானி அபேசேகரவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவோ, ரவி செனவிரத்னவை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவோ நியமிக்குமாறு, பேராயர் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் குறிப்பிட்டுக் கோரவில்லை என்று தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த தெரிவித்துள்ளார்.
“ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளுபவர்களை மாற்றவும், இவர்களை மீண்டும் அதே பதவிகளில் அமர்த்தவும் மட்டுமே, பேராயர் மல்கம் ரஞ்சித் விரும்பினார்.
ஷானி அபேசேகர போன்ற அதிகாரிகள் மீது சில குற்றச்சாட்டுகள் இருப்பதை திருச்சபை அறிந்திருந்தது என்றும், அருட்தந்தை ஜூட் கிரிசாந்த மேலும் தெரிவித்துள்ளார்.