மேலும்

Tag Archives: பொதுமன்னிப்பு

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு சம்பிக்க ரணவக்க எதிர்ப்பு

உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் யோசனைக்கு சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு – அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிப்பு

போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சிறிலங்கா படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று, சிறிலஙகா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று 31 அரசியல் கைதிகளுக்குப் பிணை – உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட மறுப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 31 தமிழ் அரசியல் கைதிகள் முதற்கட்டமாக இன்று பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோகண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள் நாளை மீண்டும் உண்ணாவிரதப் போரில் குதிக்கின்றனர்

தமது விடுதலை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்திருந்த வாக்குறுதி இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தாம் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு குறித்து விரைவில் முடிவு – கூட்டமைப்பிடம் மைத்திரி உறுதி

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது தொடர்பாக விரைவில் உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க முடிவு – பொதுமன்னிப்பு இல்லை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வது என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் கூட் டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு இல்லை – சிறிலங்கா அரசாங்கம் கைவிரிப்பு

சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு, பொதுமன்னிப்பு வழங்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சிகிரியாவில் பெயர் பொறித்த மட்டக்களப்பு பெண்ணுக்கு பொதுமன்னிப்பு – ஆணையிட்டார் மைத்திரி

சிகிரியாவில் பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதி, புராதன சின்னத்துக்கு சேதம் விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தம்புள்ள நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற இளம் பெண்ணுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்புக்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – சிறிலங்கா அதிபரின் பேச்சாளர்

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் மொகான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் நிபந்தனைக்கு அடிபணிய இந்தியா மறுப்பு

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களையும், உடனடியாகவும், நிபந்தனைகளின்றியும் சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.