மேலும்

சிகிரியாவில் பெயர் பொறித்த மட்டக்களப்பு பெண்ணுக்கு பொதுமன்னிப்பு – ஆணையிட்டார் மைத்திரி

uthasiri-mother

உதயசிறியின் தாய்.

சிகிரியாவில் பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதி, புராதன சின்னத்துக்கு சேதம் விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, தம்புள்ள நீதிமன்றத்தினால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற இளம் பெண்ணுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான ஆணையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு ஒப்பமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு தாம் செய்த பரிந்துரைக்கு அமைவாக அது தொடர்பான ஆணையில், சிறிலங்கா அதிபர் நேற்றிரவு கையெழுத்திட்டதாகவும், இதனையடுத்து அடுத்த சில நாட்களுக்குள் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் நாள் உலக பாரம்பரியமாக கருதப்படும் சிகிரிய வளாகத்தில் கவி வரிகள் உள்ள பகுதியில் இரு சொற்தொடர்களை கிறுக்கியதாக மேற்படி இளம் பெண் மீது குற்றம்சுமத்தப்பட்டது.

இதன் அடிப்படையில், தம்புள்ள நீதிவான் நீதிமன்றம் குறித்த பெண்ணுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருந்தது.

இதையடுத்து அவர் அனுராதபுர சிறைச்சாலையில் தண்டனையை அனுபவித்து வந்த நிலையிலேயே, பொதுமன்னிப்பு அளிக்க சிறிலங்கா அதிபர் முடிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *