நீர்க்காகம் – IX கூட்டுப் பயிற்சிக்கு தயாராகும் சிறிலங்கா படைகள்
சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘நீர்க்காகம் – IX ‘ கூட்டுப் பயிற்சி (Cormorant Strike IX) எதிர்வரும் செப்ரெம்பர் 6ஆம் நாள் தொடங்கவுள்ளது.
சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் ‘நீர்க்காகம் – IX ‘ கூட்டுப் பயிற்சி (Cormorant Strike IX) எதிர்வரும் செப்ரெம்பர் 6ஆம் நாள் தொடங்கவுள்ளது.
மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடற்கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு பிரான்ஸ் உதவும் என்று சிறிலங்காவுக்கான பிரெஞ்சு தூதுவர் ஜீன் மரின் சுப், தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் பணியாற்றுகின்ற சிறிலங்காவின் மூன்று தூதுவர்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கண்டறிந்துள்ளது.
சிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இந்த ஆண்டில் இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக, இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
சிறிலங்காவில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக, பிரெஞ்சு அதிபர் பிராங்கோயிஸ் ஹொலன்ட் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் மாளிகையில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு பிரெஞ்சு அதிபர் புத்தாண்டு வரவேற்பு விருந்துபசாரத்தை அளித்தார்.
பிரான்ஸ் ‘சிலம்பு’அமைப்பின் ‘புலம்பெயர் தமிழர் திருநாள்’ஒருபண்பாட்டு விழாவிற்குரிய அடையாளப்படுத்தலுடன் (14-01-2017) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தைப்பொங்கலென்பது இயற்கையுடன் இணைந்த வாழ்வை நினைவுகூரும் கூட்டுநிகழ்வு, இயற்கைக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டின் வெளிப்பாடு.இதற்குள் மதம் இல்லை. வேறெந்தப் பாகுபாடுகளுக்குமுரிய கூறுகளும் இல்லை.
கிளிநொச்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு மையம் அடுத்த ஆண்டு 100 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. புதுச்சேரியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறியிருக்கும் வெளிநாட்டவர்கள் குற்றச்செயல்களிலும் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் புதியசட்டம் ஒன்றுக்கான முன்மொழிவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.