மேலும்

சிறிலங்கா உள்ளிட்ட16 நாடுகளுடன் கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது இந்தியா

india_sri-lanka_joint_military_training_exerciseசிறிலங்கா உள்ளிட்ட 16 நாடுகளுடன் இந்த ஆண்டில் இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக, இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே தெரிவித்துள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

‘இருதரப்பு பாதுகாப்பு உறவுகளையும் ஒத்துழைப்புகளையும் வலுப்படுத்தும்  நோக்கில் 2017ஆம் ஆண்டில் 16 நாடுகளுடன் இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.

அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், சீனா, பிரான்ஸ், இந்தோனேசியா, கசாக்ஸ்தான், கிரிகிஸ்தான், மலேசியா, மாலைதீவு, மொங்கோலியா, நேபாளம், ரஷ்யா, சிறிலங்கா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மற்றும் அமெரிக்கா ஆகிய 16 நாடுகளுடனேயே இந்தியா கூட்டு இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.

இராணுவ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல், பயிற்சிக் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மற்றும் ஏனைய செயற்பாடுகள் இந்தக் கூட்டுப் பயிற்சிகளின் போது  உள்ளடக்கப்படும்’ என்றும் இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *