மேலும்

Tag Archives: லக்ஸ்மன் கிரியெல்ல

வடக்கு, கிழக்கில் மேலும் 3000 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு- சிறிலங்கா அரசு

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள மேலும் 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக அழுத்தம் இல்லை – சிறிலங்கா

போருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துலக சமூகம் எந்த அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பை பிளவுபடுத்தும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை – என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டிய எந்தத் தேவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா நிராகரிப்பு

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர், லக்ஸ்மன் கிரியலெ்ல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பு வரைவுக்கான அமைச்சரவை உப குழுவில் 4 தமிழ்ப்பேசும் அமைச்சர்கள்

சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான அமைச்சரவை உப குழுவில், இரண்டு தமிழ் அமைச்சர்களும், இரு முஸ்லிம் அமைச்சர்களுமாக, 4 தமிழ்ப்பேசும் அமைச்சர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தவைக் கண்டு ஊடகங்கள் இன்னமும் அஞ்சுகின்றன – அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச மீது ஊடகங்கள் இன்னமும் அச்சம் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல.

நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவு

சிறிலங்காவின் எட்டாவது  நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிப்பது சபாநாயகர் தான் – லக்ஸ்மன் கிரியெல்ல

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருப்பதாக ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்கமாட்டார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கமாட்டார் என்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவே பணியாற்றுவார் என்றும், கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.