மேலும்

வெளிநாட்டுத் திட்டங்களுக்கு சிறப்பு பணியகங்கள் இனி இல்லை

வெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கான சிறப்பு பணியகங்களை நிறுவும் நடைமுறையை நிறுத்துமாறு, சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நாவின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டு பொறிமுறை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்,  தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டு பொறிமுறை மூலம், மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்புக்கூறலைத் தொடர சிறிலங்கா அரசாங்கம் தயாராக உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.

பாதாள உலக குழுவுக்கு ரவைகளை விற்ற இராணுவ அதிகாரி கைது

பாதாள உலக கும்பலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த முல்லைத்தீவு மல்லாவி, பாலிநகர் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியான லெப்.கேணல் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

2027 வரை சிறிலங்காவை கண்காணிக்க கோருகிறது புதிய தீர்மான வரைவு

சிறிலங்காவை மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பில் வைத்திருக்க கோரும் புதிய தீர்மான வரைவு ஒன்றை அனுசரணை நாடுகள் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிகாரிகள் இன்று அனுரவுடன் சந்திப்பு

இருதரப்பு வர்த்தகம் குறித்து பேச்சு நடத்துவதற்காக சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகள், இன்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.

இலக்கை எட்ட முடியாது – ஒப்புக் கொள்கிறது சிறிலங்கா அரசு

2025 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் சிறிலங்காவின் இலக்கை எட்ட முடியாது என,  அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆட்சிக் கவிழ்ப்புகளில் சமூக ஊடகங்கள் – ரணில் எச்சரிக்கை

ஆட்சிக் கவிழ்ப்புகளில் சமூக ஊடகங்களின் பங்கு இருப்பதன் ஆபத்து குறித்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

முன்னாள் அதிபர்களின் சலுகைகளை பறிக்கும் சட்டம் நிறைவேறியது

முன்னாள் அதிபர்களின் உரிமைகள்,  சலுகைகளை ஒழிப்பதற்கான புதிய சட்டத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்தார் சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாது என சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கில் தப்பிய முன்னாள் காவல்துறை அதிகாரி தேடப்படுகிறார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரை தேடி வருவதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.