இலக்கை எட்ட முடியாது – ஒப்புக் கொள்கிறது சிறிலங்கா அரசு
2025 ஆம் ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் சிறிலங்காவின் இலக்கை எட்ட முடியாது என, அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
திட்டமிடப்பட்ட இலக்கை விட அரை மில்லியனுக்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளையே இந்த ஆண்டு ஈர்க்க முடியும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு 3 மில்லியன் இலக்கை அடையமாட்டோம், ஆனால் எங்கள் இலக்கை நாங்கள் குறைக்க மாட்டோம்.
இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், நாங்கள் 2.5 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளைளே ஈர்க்க முடியும் என்று நினைக்கிறேன்.
அதிகாரப்பூர்வ இலக்கை அடைய, சிறிலங்கா எஞ்சியுள்ள 16 வாரங்களில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க வேண்டும்.
இது வாரத்திற்கு 87,000 க்கும் அதிகமாகும். இது தற்போதைய வருகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.