அமெரிக்க அதிகாரிகள் இன்று அனுரவுடன் சந்திப்பு
இருதரப்பு வர்த்தகம் குறித்து பேச்சு நடத்துவதற்காக சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகள், இன்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.
இறக்குமதிகள் மீதான புதிய வரிகள் குறித்து சிறிலங்காவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே வொஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற அதிகாரி மட்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாக அமெரிக்க குழு, கொழும்பு வந்துள்ளது.
சிறிலங்காவின் பொருட்களுக்கு முன்னர் 44 வீத வரியை அறிவித்திருந்த அமெரிக்க அரசாங்கம், பின்னர் 20 வீதமாக குறைக்க ஒப்புக்கொண்டது.
அமெரிக்காவிலிருந்து அதிக இறக்குமதிகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா ஒப்புக்கொண்டுள்ளது, இதன் மூலம் வர்த்தக ஏற்றத்தாழ்வைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.