மேலும்

ஆட்சிக் கவிழ்ப்புகளில் சமூக ஊடகங்கள் – ரணில் எச்சரிக்கை

ஆட்சிக் கவிழ்ப்புகளில் சமூக ஊடகங்களின் பங்கு இருப்பதன் ஆபத்து குறித்து சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.

நேபாளத்தில் அதிகரித்து வரும் வன்முறையைக் கண்டித்து முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க  அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அண்மைய கொலைகள், அமைச்சர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்ற கட்டிடங்கள் எரிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரணில் விக்ரமசிங்க,  முன்னாள் பிரதமரின் மனைவியின் கொலைக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதற்காக காவல்துறையை விமர்சித்துள்ளார்.

நேபாள அரசாங்கம் தீர்க்கத் தவறிய நீண்டகால பிரச்சினைகளே நெருக்கடிக்குக் காரணம், இது இளைஞர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியது.

அரசாங்கங்களை கவிழ்ப்பதில் கூகுள், பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக நிறுவனங்கள் ஆபத்தான பங்கை வகிக்கின்றன.

நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற ஜனநாயக நிறுவனங்களை எரிப்பது நேபாளத்தின் ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *