மேலும்

கடமைகளைப் பொறுப்பேற்றார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக, கோத்தாபய ராஜபக்ச இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மனித உரிமைகள், பொறுப்புக்கூறலை கோத்தா உறுதிப்படுத்த வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்காவின் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்ச மனித உரிமைகளையும், பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியேயா வலியுறுத்தியுள்ளார்.

பெப்ரவரி 15இற்கு முன் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு  ஐதேக எதிர்ப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து தேர்தலை நடத்துவதற்கு, ஆதரவு வழங்க ஐதேக நாடாளுமன்றக் குழு இணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம்

சிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற  நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம்.

‘போருழல்காதை’ : நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும்!

குணா கவியழகனின்  ‘போருழல் காதை’ நாவல்  நூல் அறிமுக- விமர்சன அரங்கும் திரையிடலும் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

புதிய பிரதமர், அமைச்சரவை நியமனம் நாளை வரை தாமதம்?

சிறிலங்காவின் புதிய பிரதமர், மற்றும் அமைச்சரவை நியமனங்கள், நாளை வரை தாமதமாகக் கூடும் என்று கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

33 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்தனர்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில், 33 பேரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கோத்தாவிடமே பாதுகாப்பு அமைச்சு

சிறிலங்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கோத்தாபய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சு தம்வசமே இருக்கும் என்று அறிவித்துள்ளார்.

வெளியேற்றப்பட்ட ஹிஸ்புல்லா – ஐதேக அமைச்சர்களுக்கு கூச்சல்

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவின் பதவியேற்பு நிகழ்வுக்குச் சென்ற ஐதேக அமைச்சர்கள் பலருக்கும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

24 மணி நேரத்துக்குள் பதவி விலகுவார் சிறிலங்கா பிரதமர் ரணில்

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் விலகிக் கொள்வார் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவரும், அவை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.