பலாலிக்கு இன்று மீண்டும் பறந்தது அமெரிக்க விமானப்படை விமானம்
சிறிலங்காவின் வட பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முக்கியமான நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக, அமெரிக்க விமானப்படையின் C-130J விமானம் இன்று மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் மேற்கொண்டது.
பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்த விமானத்தில், அத்தியாவசிய உதவிப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டிருந்தன.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குஉதவுவதற்காக, சிறிலங்கா விமானப்படைக்கும் மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்காவை சேர்ந்த பங்காளர்களுக்கும் உதவி செய்வதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்று அமெரிக்க தூதரகம் எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளது.




