மேலும்

எம்.பிக்களுக்கு மகிந்த இலஞ்சம் கொடுக்க முனைந்தார் – மைத்திரி ஒப்புதல்

தான் நியமித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்டார் என்பதை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார்.

இராஜதந்திர நிகழ்வுகளில் பிரதமர், அமைச்சர்களுக்குப் பதிலாக வெளிவிவகாரச் செயலர்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதிலாக, வெளிநாட்டுத் தூதரகங்களின் நிகழ்வுகளில், வெளிவிவகாரச் செயலரே, சிறிலங்கா அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்து வருகிறார்.

சிறிலங்காவை உன்னிப்பாக கவனிக்கிறோம் – பிரித்தானியா

சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள, பிரித்தானியாவின், மனித உரிமைகளுக்கான இராஜாங்க அமைச்சர் அகமட் பிரபு ,  அங்கு மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சி என்பன பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

அதிபர் தேர்தலை இப்போது நடத்த முடியாது – மைத்திரி

அதிபர் தேர்தலை நடத்துமாறு, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

கொழும்பில் ஒரு இலட்சம் பேரைக் குவிக்கிறது ஐதேக

கொழும்பில் அடுத்த வாரம் ஒரு இலட்சம் பேரைக் குவித்து, பாரிய பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீர்ப்பு வழங்கப்படும் வரை தடை நீடிப்பு

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு, நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பதவியிழந்த அமைச்சர்கள் புடைசூழ இரணைமடுவுக்கு வந்த மைத்திரி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன், புனரமைப்புச் செய்யப்பட்ட கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான்கதவு ஒன்றை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால  சிறிசேன இன்று திறந்து வைத்தார்.

நாடாளுமன்ற கலைப்பு – திங்களன்றே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு?

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படமாட்டாது என்று தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக  ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி

மன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப் பணியின் போது, இரும்புக் கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.