இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் கோத்தாவுக்கு இராப்போசன விருந்து
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு இராப்போசன விருந்து அளித்து கௌரவித்தார்.
இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்களாள ரவிசங்கர் பிரசாத், விகே.சிங், சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து, மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.