மேலும்

சிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபர்

இறையாண்மை கொண்ட நாடு என்ற சிறிலங்காவின் அடையாளத்தை இந்தியாவும் சீனாவும், மதிக்க வேண்டும் என சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தமது கீச்சகப் பதிவு ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அதில் அவர்,  “ இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட உலகளாவிய சக்திகளை- உங்கள் நம்பிக்கையை வைத்து, எங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்ய அழைக்கிறேன்.

அதேவேளை, ஒரு இறையாண்மை கொண்ட தேசமாக எங்கள் தனித்துவமான அடையாளத்தை மதிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *