நிசாந்த சில்வாவை நாடு கடத்த மறுத்ததா சுவிஸ்?- தூதரகம் அறிக்கை
சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்ற குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வாவை, நாடு கடத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் தம்மிடம் கோரிக்கை எதையும் விடுக்கவில்லை என்று கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
“சிறிலங்கா குற்ற விசாரணைத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்துவதற்கு சுவிஸ் அரசாங்கம் மறுத்து விட்டது என குற்றச்சாட்டுகள் வெளியாகின்றன.
அவ்வாறான வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை” என்று சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.