சென்னை சென்றடைந்தார் முதலமைச்சர் விக்னேஸ்வரன் – செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு
சென்னையில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் நடைபெறவுள்ள கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று காலை தமிழ்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரத்ன நாளை மணிப்பால் செல்லவுள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நாவுக்கு ஒத்துழைப்பு வழங்குவோரை மௌனமாக்க சிறிலங்கா முற்படுவதற்கு எதிராக அமெரிக்கா வெளியிட்ட கருத்தை நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வரவேற்றுள்ளார்.
மலையகத்தில் கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெற்றோரை இழந்த சிறுவர்களை வடக்கு மாகாணசபையிடம் ஒப்படைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
முள்ளிக்குளத்தில் கடற்படையினர் தளமிட்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள மக்களை மாற்று இடங்களில் மீளக்குடியேற்றுவதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாயய ராஜபக்சவிடம், மன்னார் ஆயர் இராயப்பு யொசெப் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுவதற்குச் செல்வதற்காக சிறிலங்கா வந்த மூன்று மாலைதீவு பிரஜைகள், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களில் பெறப்பட்ட சமிக்ஞைகள், தரவுகளின் அடிப்படையில் இந்தியா குறித்த புதிய பார்வையை ஏற்கனவே ஒருசில ஆய்வாளர்கள் குறிப்பிட்டு காட்டி உள்ளனர். அவை மோடி அவர்களின் சொந்த அரசியல் நம்பிக்கைகளின் அடிப்படையிலும், எதிர்கால நோக்கு அறிக்கைகளையும் மையமாக கொண்டு பார்க்கப்பட்டவையே. ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் காணப்படும் மேலும் பல கிராமங்கள் இவ்விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைக்குள் உள்வாங்கப்படவில்லை என அனர்த்த முகாமைத்துவ மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 19ம் நாள் வர்த்தமானி மூலம் வெளியிடுவார் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
நாடுகளுக்கிடையே சிறிலங்கா மோதல்களைத் தூண்டி விடாது என்றும் அவ்வாறு மோதல்களைத் தூண்டுவது, சிறிலங்கா உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் விரோதமானது எனவும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த பெரேரா தெரிவித்துள்ளார்.