மேலும்

தேர்தல் முடிவை உன்னிப்பாக அவதானிக்கிறது இந்தியா – புதுடெல்லி ஆய்வாளர்

India-srilanka-Flagசிறிலங்கா அதிபர் தேர்தலின் முடிவை புதுடெல்லி கூர்ந்து அவதானித்து வருவதாக, புதுடெல்லியை சேர்ந்த மூலோபாய விவகார ஆய்வாளர் நிதின் ஏ கோகலே தெரிவித்துள்ளார்.

டெக்கன் குரோனிக்கல் நாளிதழில் அவர் சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக எழுதியுள்ள கட்டுரை ஒன்றில், இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

“சிறிலங்கா அதிபர் தேர்தலின் முடிவை உலகம் முழுவதும், உன்னிப்பாக அவதானிக்கிறது.

சிறப்பாக புதுடெல்லி கூர்ந்து கவனித்து வருகிறது.

ராஜபக்சக்களுடனான இந்தியாவின் உறவுகள் இனிப்பும் கசப்பும் கலந்ததாகவே  இருக்கிறது.

இந்தியாவுக்கு எதிராக சீனாவைப் பயன்படுத்தும் அவரது போக்கை புதுடெல்லி உண்மையில் விரும்பவில்லை.

ஆனாலும், ராஜபக்சவுக்கு மாற்றானவர் இன்னமும் அறியப்படாமலே உள்ளார்.

வரும் ஜனவரி 8ம் நாள் நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் விளைவாக யார் வெற்றி பெற்றாலும், கொழும்புடனான  உறவுகளை மீளவும் செம்மைப்படுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *