மேலும்

இலங்கைத்தீவில் இந்தியாவும் சீனாவும் – ஏமாற்றப்படும் ஈழத்தமிழர்களும்

இலங்கைத்தீவு என்பது சீனாவுக்கு ஒரு தரிப்பிடம் மட்டுமே. சீனாவைத் திருப்திப்படுத்தக்கூடியளவுக்கு இலங்கைத்தீவில் வளங்களோ அல்லது நுகர்வோரின் எண்ணிக்கைப்பலமோ இல்லை. ‘புதினப்பலகை’க்காக ம.செல்வின்

அரசியல்தளம் – ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் – புலம்பெயர்ந்தோரும்

‘புதினப்பலகை’ தனது தனித்துவத்தை பேணியபடி நான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கின்றது. அப்படியானால் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்து நான்காம் ஆண்டாகின்றது.

சிறிலங்காவின் பேரினவாத தற்காப்பு உத்திகள் – 01

சிறிலங்கா இராசதந்திரிகளோ தமது நாட்டின் ஒரு இனத்திற்கு எதிராக தாம் கொண்ட இன அழிப்பு கொள்கையை பாதுகாப்பதிலும், நியாயப்படுத்துவதிலும். அந்த இனத்தை பயங்கரவாத போக்குடைய இனமாக காட்டுவதிலும் தான் முக்கிய கவனம் செலுத்துகின்றனர். ‘புதினப்பலகை’க்காக *லோகன் பரமசாமி.

அபிவிருத்தியா? அரசியலா? நிராகரிப்பும் – தடுமாற்றமும்

‘புதினப்பலகை’க்காக நந்தன் அரியரத்தினம் | கடந்த முப்பதாண்டு காலமாக எதிர்ப்பு அரசியல் சக்தியாக விளங்கிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், ஈழத் தமிழர்களின் அரசியல் கோரிக்கை ஒரு நிலையற்ற நிலைக்கு இடம்மாறியது. இதனை க.வே.பாலகுமாரின் வார்த்தை பிரயோகம் ஒன்றின் மூலம் சொல்லுவதாயின் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் ஒரு ‘முட்டுச் சந்தியில்’ நிற்கிறது.

புயலில் ஒரு தோணி..

தமிழ்கூறு நல்லுலகெங்கும் புயல் வீசி சுழன்றடித்துக் கொண்டிருந்த வேளையில்தான் ‘புதினப்பலகை’ எனும் இச்சிறு தோணி 17-11-2009ல் தனது பயணத்தை தொடங்கியது.  

தெருக்களில் திரிக, தமிழர்கள் அனைவரும், நிர்வாணம் கொண்டு…

திருவிழாவில் காணாமல் போன வாய்பேசாக் குழந்தையாகத் தவித்து நிற்கின்றது ஈழத் தமிழினம். அதிலும் – தேர்தல் திருவிழாவின் நெரிசலுக்குள் சிக்குண்டு விழி பிதுங்கி நிற்கின்றது ஈழத் தமிழ் தேசியம்.

“மே 19”

உலகின் எல்லா தேசிய இனங்களின் மீதும் வரலாறு ஆழமான வடுக்களைப் பதித்துவிட்டுத் தான் செல்கின்றது. ஈழத் தமிழ் சமூகத்தின் மீது மே 19, 2009 அன்று வரலாறு இழைத்ததை, வெறுமனே ஒரு வடு அல்லது ஒரு காயம் என்று மட்டும் சொல்லிவிட்டு, தாண்டிச் சென்றுவிட முடியாது. அது ஒரு தண்டனை; அது ஒரு பாடம்.

மூன்றாம் முள்ளி வாய்க்கால்..?

4 ஆம் கட்ட ஈழப் போரின் பின்னான ஆய்வுகள் பெரும்பாலும் ஒரு நம்பிக்கையற்ற எதிர்காலம் பற்றிய எதிர்வு கூறல்களாகவும், அதிலிருந்து எப்படியாவது மீண்டு வர வேண்டிய தேவைகள் பற்றியதாகவுமே அமைந்திருந்தன.