மேலும்

பிரிவு: செய்திகள்

‘அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும்’ – ஊடகம்

சிறிலங்காவைத் திருப்திப்படுத்தும் அவுஸ்திரேலியாவின் இந்த நகர்வானது வெட்கக்கேடான, அவமானகரமான விடயமாகும். சிறிலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்ட ஆட்சி குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலியா இவற்றைத் தனது கவனத்தில் எடுக்காது சிறிலங்காவுடன் அரசியல் உறவைப் பேணுவதென்பது ஒரு பிழையான நகர்வாகும்.

சிறிலங்காவில் அனைத்தும் இராணுவ மயமாகிவிட்டது – கேணல் ஹரிகரன்

சிறிலங்காவில் தற்போது அனைத்துமே இராணுவ மயமாகி விட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார், இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில் நேற்றுமுன்தினம் மாலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் உரை இடம்பெற்றது.

இந்திய மாநிலங்களின் அதிகாரங்களையே நாமும் கேட்கிறோம் – சென்னையில் சம்பந்தன் தெரிவிப்பு

இந்தியாவில் மாநிலங்களுக்கு இருப்பதைப் போன்ற அதிகாரங்களை நாமும் பெறுவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். சென்னை, அடையாறில் உள்ள இந்திய- தெற்காசிய ஆய்வு மையத்தில், ‘இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் நேற்று மாலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.