மேலும்

“புலிகளைப் பிடித்து தண்டிப்போம்” என்கிறார் சம்பிக்க

champika-ranawakaசிறிலங்கா அரசாங்கத்தின் கையில் தான் இரத்தக்கறை இருப்பதாகவும், போர் வீரர்களைத் தாம் பாதுகாப்போம் என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலர் சம்பிக்க ரணவக்க.

“விடுதலைப் புலிகளின் எச்சமாக இருப்போருடன், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தொடர்புகளை வைத்திருக்கிறது.

புதிய ஜனநாயக முன்னணி அதிகாரத்துக்கு வந்ததும், எல்லா விடுதலைப் புலிகளையும் கைது செய்து அவர்களைத் தண்டிக்கும்.

புலிகளின் தலைவராகப் பொறுப்பேற்ற குமரன் பத்மநாதனை கிளிநொச்சியில்  செயற்பட அனுமதித்துள்ளது அரசாங்கம்.  ராம், நகுலன் போன்றவர்கள் மட்டக்களப்பில் இயங்குகின்றனர்.

உலகத் தமிழர் பேரவையும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது.

எதிரணி ஆட்சியைப் பிடித்தால், வெளிநாடுகளில் உள்ள புலிகளின் நிதி, கப்பல்கள் உள்ளிட்ட சொத்துக்களையும், கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்களுடன் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எவரும் இல்லை.

அரசாங்கம் தனது கைகளில் இரத்தக்கறையை கொண்டுள்ளது. எமது கைகளில் இல்லை.நாம் படையினரைப் பாதுகாப்போம்.

மகிந்த சிந்தனை ஒரு வெற்று ஆவணம். நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது கைவைக்க எவரையும் நாம் அனுமதியோம்.

2005ம் ஆண்டு மகிந்த சிந்தனையில், தீர்வு குறித்து பிரபாகரனுடன் தான் பேசுவேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தான எதையும் நாம் செய்ய மாட்டோம்.

மீள்குடியேற்றத்தை செய்து, சட்டவிரோத நில அபகரிப்பை தடுத்து நிறுத்துவோம்.

நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவுக்கு வெளிநாட்டு நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போர்க்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக தண்டனை விதிக்க அவர்களால் பரிந்துரை செய்ய முடியும்.

இதனைத் தொடக்கி வைத்தவர் ராஜபக்ச தான்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *