மேலும்

பிரிவு: செய்திகள்

சவூதியில் அனோஜனுக்கு மரணதண்டனை – உன்னிப்பாக கவனிக்கிறதாம் சிறிலங்கா

சவூதி அரேபியாவில்  இலங்கையரான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ள நிலையில், அவரது வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாமலுக்கு 29ஆம் நாள் வரை விளக்கமறியல்

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, செப்ரெம்பர் 29 ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். பொதரகம இன்று உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் கூட்டுப் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றது சிறிலங்கா இராணுவ அணி

ரஷ்ய படையினருடனான கூட்டுப் பயிற்சிக்காக சிறிலங்கா இராணுவத்தின் 75 அதிகாரிகள் மத்தல விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்து அமெரிக்க தூதுவர் கலந்துரையாடல்

சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் முதல் முறையாக அதிகாரபூர்வமாகச் சந்தித்து பேசியுள்ளார்.

நாமல் மீது விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் – விளக்கமறியல் நீடிப்பு

எயர் பஸ் விமான கொள்வனவு மோசடி வழக்கில், நாமல் ராஜபக்சவுக்கு எதிராக  விரைவில் முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக,  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதியிடம் 6 மணிநேரம் விசாரணை

சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் டொனால்ட் பெரேரா நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நேற்று 6 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

என்பிபியின் பரப்புரைக்கு புலம்பெயர் தமிழர்கள் நிதியுதவி- குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் மறுப்பு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தேர்தல் பரப்புரைக்கு புலம்பெயர்  தமிழ்ச் சமூகம் நிதியுதவி வழங்கியதாக, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சவூதியின் மேற்குப் பகுதியில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு

சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் உருவாகியுள்ள சூழ்நிலைகளை அடுத்து, அங்குள்ள சிறிலங்கா குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு, ஜெட்டாவில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் அவசரகால அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சஹ்ரானைப் பாதுகாத்த இராணுவ, அரச புலனாய்வு அமைப்புகள் – நீதிமன்றில் குற்றச்சாட்டு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான முன்கூட்டிய தகவல்களை இராணுவ மற்றும் அரச புலனாய்வு அமைப்புகளின் சில பிரிவுகள், ஏனைய பாதுகாப்பு அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளத் தவறியதாக, சட்டமா அதிபர் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஆரம்பம் – நல்லூரில் வெண்கலச் சிலை அமைப்பு

யாழ்ப்பாணம்-  நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், அவரது இடுப்பளவிலான வெண்கல உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.