சிறிலங்காவின் பாதுகாப்பு ஒதுக்கீடு இந்தியா, சீனாவை விட அதிகம்
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி, ஒப்பீட்டளவில் இந்தியா, சீனா போன்ற நாடுகளை விடவும் அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி, ஒப்பீட்டளவில் இந்தியா, சீனா போன்ற நாடுகளை விடவும் அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்கா சுதந்திர கட்சியினாலோ அல்லது வேறு எந்த கட்சியினாலோ, சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெலியத்தை தொகுதியில் போட்டியிட முன் வருமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குச், அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சவால் விடுத்துள்ளார்.
சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவத்துக்கு அச்சுறுத்தலாகவும், இருகட்சி முறைக்கு இட்டுச் செல்வதாகவும் இருந்தால், 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாக்களிப்போம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல்முறையை மாற்றியமைப்பதற்கான 20ஆவது திருத்தச்சட்ட யோசனை, சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதனை ஒருபோதும், ஆதரிக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன தேர்தலில் எப்படி வெற்றி பெற்றார் என்பதை விளக்கும், ‘யுக பெரலிய’ என்ற நூலைப் படித்துள்ளதாகவும், தமது அரசாங்கத்தின் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.
மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதென, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் நியமிக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட உயர்மட்டக் குழு தீர்மானித்திருப்பதாக வெளியான செய்திகளை, அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன நிராகரித்துள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான உள்ளக விசாரணைக்கான சட்ட நடைமுறைகள் வரையப்பட்டு வருவதாகவும், இதில் அனைத்துலக விசாரணையாளர்களுக்கோ சட்டவாளர்களுக்கோ இடமளிக்கப்படாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் பரவி வரும் இன்புளூவென்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாகவும், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அரசாங்கத்தின் செலவுகள் கட்டுமீறிச் சென்று விட்ட நிலையில், கடன்படு நிலையின் எல்லையை தொட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.