மேலும்

சிறிலங்காவின் பாதுகாப்பு ஒதுக்கீடு இந்தியா, சீனாவை விட அதிகம்

sri-lanka-armyசிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னரும், பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி, ஒப்பீட்டளவில் இந்தியா, சீனா போன்ற நாடுகளை விடவும் அதிகம் என்று தகவல்கள் கூறுகின்றன.

2014ஆம் ஆண்டு நிலவரப்படி, சிறிலங்காவின் மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதம், பாதுகாப்புக்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் பூட்டான் மொத்த தேசிய உற்பத்தியில் 9 சதவீதத்தையும், பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டது.

அதையடுத்து பாகிஸ்தான் மொத்த தேசிய உற்பத்தியில் 8 சத வீதத்தை பாதுகாப்புக்காக ஒதுக்கியிருந்தது.

எனினும், ஆசியாவின் வல்லரசு நாடுகளான சீனாவும் இந்தியாவும்- மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்தையே கடந்த ஆண்டு பாதுகாப்புக்காக செலவிட்டுள்ளன.

அதேவேளை பங்களாதேசும், நேபாளமும், தமது மொத்த தேசிய உற்பத்தியில், 3 சதவீதத்தை பாதுகாப்புக்கு ஒதுக்கியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *