மேலும்

பிரிவு: செய்திகள்

அரசியல் செல்வாக்கில் தூதுவர்களானவர்களுக்கு ஆப்பு வைக்கிறார் மங்கள சமரவீர

வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகங்களில், அரசியல் செல்வாக்கில் நியமனம் பெற்ற தூதுவர்கள் மற்றும் அதிகாரிகளை உடனடியாகத் தமது பதவி விலகல் கடிதங்களை ஒப்படைக்குமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கோரவுள்ளார்.

சீனாவுடனான உறவுக்கு சிறிலங்கா முன்னுரிமை கொடுக்குமாம் – ரணில் கூறுகிறார்

சீனாவுடனான உறவுகளை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் வலுப்படுத்தும் என்றும், இருதரப்பு உறவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வொசிங்டன் பொங்கல் விழாவில் நிஷா பிஸ்வால் – சிறிலங்கா தூதுவருடன் முக்கிய பேச்சு

வொசிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதரகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கலந்து கொள்ளவுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுனராக பாலிஹக்கார நியமனம்

சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவரான எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார, வடக்கு மாகாண ஆளுனராக அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார் பசில் – தோல்விக்கு பொறுப்பேற்கிறார்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இன்று அறிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சித் தலைமையை மைத்திரியிடம் ஒப்படைக்க மகிந்த முடிவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை, புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, முடிவு செய்துள்ளதாக, சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைத்திரியைச் சந்திக்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த சில நாட்களுக்குள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

தனியார் காணிகளை மீள ஒப்படைக்குமாறு முப்படைகளுக்கும் உத்தரவு

வடக்கு, கிழக்கில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள தனியார் காணிகளில், பாதுகாப்புக் கரிசனைக்குரியவை தவிர்ந்த ஏனையவற்றை பொதுமக்களிடம் மீள ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மடுத் திருத்தலத்தில் பாப்பரசர் – ஆறு இலட்சம் மக்கள் முன் சமாதானப் புறாவை பறக்கவிட்டார்

பாப்பரசர் பிரான்சிஸ் இன்று பிற்பகல் மடுத் திருத்தலத்தில் சுமார் ஆறு இலட்சம் மக்கள் முன்பாக சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டார்.

யோசிதவை கடற்படையில் இருந்து விலக்கி விட்டே பதவியைத் துறந்தார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தான் அலரி மாளிகையை விட்டு வெளியேற முன்னதாக, தனது இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவை சிறிலங்கா கடற்படையை விட்டு விலக அனுமதிக்கும் ஆவணங்களில் ஒப்பமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.