மகிந்த அணியை கிலிகொள்ள வைத்துள்ள மைத்திரியின் தாக்குதல் – அடுத்த கட்டம் குறித்து குழப்பம்
மகிந்த ராஜபக்சவை தாம் அங்கீகரிக்கவில்லை என்றும், அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படாது என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை வெளியிட்ட கருத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

