கடந்தகால இரத்தக்களரிக்கும் நம்பிக்கைக்கும் இடையில் சிக்கியுள்ள இலங்கைத் தமிழர்கள்
இன்னமும், போரின் நினைவுகளை மறக்கமுடியாது மக்கள் துன்பப்படுகின்றனர். தெருக்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த காலத்தை மேலும் நினைவூட்டுகின்றனர். புதிய அரசாங்கம் இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைத்துள்ள போதிலும், இராணுவமயமாக்கல் என்பது இன்னமும் பெரியதொரு விவகாரமாகவே உள்ளது.


