மேலும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமையை இழக்கிறது அமெரிக்கா – பாகிஸ்தானும் தோல்வி

eagle-flag-usaஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றி வந்த அமெரிக்கா, வரும் டிசெம்பர் மாதத்துடன் உறுப்பு நாடு என்ற தகைமையை  இழக்கவுள்ளது.

இரண்டு பதவிக்காலங்கள் தொடர்ச்சியாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை வகித்து வந்த அமெரிக்கா, பேரவையின் விதிமுறைகளுக்கு அமைய, இந்த ஆண்டு இறுதியுடன் உறுப்புரிமையை இழக்கவுள்ளது.

அமெரிக்கா, பாகிஸ்தான், ஆர்ஜென்ரீனா, பிரேசில், ஐவரிகோஸ்ட், எஸ்தோனியா, எதியோப்பியா, காபோன், ஜேர்மனி, அயர்லாந்து. ஜப்பான், கசாக்ஸ்தான், கென்யா, மொன்ரெனிக்ரோ, தென்கொரியா, சியராலியோன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகிய 18 நாடுகள், உறுப்புரிமையை இழக்கவுள்ளன.

இவற்றுக்குப் பதிலாக, 18 புதிய உறுப்பு நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஐ.நா பொதுச்சபையில் புதிய உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் வாக்களிக்கிறார் அமெரிக்க பிரதி பிரதிநிதி மிச்சேல் ஜே சிசன்

ஐ.நா பொதுச்சபையில் புதிய உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் வாக்களிக்கிறார் அமெரிக்க பிரதி பிரதிநிதி மிச்சேல் ஜே சிசன்

வரும் ஜனவரி 1ஆம் நாளில் இருந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய உறுப்பு நாடுகளாக பெல்ஜியம், புரூண்டி, ஐவரிகோஸ்ட், ஈக்குவடோர், எதியோப்பியா, ஜோர்ஜியா, ஜேர்மனி, கென்யா, கிர்கிஸ்தான், மொங்கோலியா, பனாமா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, ஸ்லோவேனியா, சுவிற்சர்லாந்து, டோகோ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெனிசுவேலா ஆகியன தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு புதிய 18 நாடுகளைத் தெரிவு செய்வதற்கு  கடந்த 28ஆம் நாள், ஐ.நா பொதுச்சபையில், வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.

இந்த வாக்கெடுப்பில், ஆசிய- பசுபிக் பிராந்தியத்துக்கான 5 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு நடத்தப்பட்ட தேர்தலில், கடந்த முறை உறுப்பு நாடாக இருந்த பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

ஐ.நா மனித உரிமைகள், பேரவையில், சிறிலங்காவுக்கு வலுவான ஆதரவைக் கொடுத்து வந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, போர் முடிவுக்கு வந்த பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானங்களை முன்னெடுத்து வந்த அமெரிக்கா, அடுத்த ஆண்டில் பேரவையில் வாக்களிக்கும், தீர்மானங்களைக் கொண்டு வரும் உரிமையை இழக்கவுள்ளது.

ஒரு கருத்து “ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமையை இழக்கிறது அமெரிக்கா – பாகிஸ்தானும் தோல்வி”

  1. மனோ says:

    அப்ப இனி மனித உரிமை உயிர் தப்பிவிடும் என நம்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *