மேலும்

கொள்ளையர்களிடம் உடமைகளைப் பறிகொடுத்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி

general jegath-jeyasooryaசிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், முன்னாள் கூட்டுப் படைகளின் தளபதியுமான, ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, பிரேசிலில் கொள்ளையர்களிடம் சிக்கி தனது உடமைகளை இழந்துள்ளார்.

சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த, ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், பிரேசிலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அவர் அண்மையில் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் சென்றிருந்த போதே, பிரேசிலின் கள நிலவரங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சினால் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டு, எச்சரிக்கப்பட்டிருந்தார்.

அந்த எச்சரிக்கையை மீறி, வெளிவிவகார அமைச்சின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல், பிரேசிலில் உள்ள பிரபலமான கடற்கரைக்குச் சென்று விட்டுத் திரும்பிய போது, கொள்ளையர்களிடம் சிக்கியுள்ளார்.

தனது மனைவி, மகள் மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் சகிதம், ரியோடிஜெனீரோவுக்கு, சுற்றுலா சென்ற ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, கடந்த மாதம் 13ஆம் நாள் பிற்பகல், தலைநகர் பிரேசிலியா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தார்.

அவர்கள் நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடி அருகில் உள்ள உணவகம் ஒன்றில், வாகனத்தை நிறுத்தி சாப்பிட்டனர்.

அவர்கள் திரும்பி வந்த போது, ஆயுதபாணிகளான இரண்டு கொள்ளையர்கள், அவர்களை மிரட்டி விட்டு, காரையும், அதிலிருந்த உடமைகளையும் திருடிச் சென்றுள்ளனர்.

அவர்கள் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவின் கடவுச்சீட்டை மட்டும் கைவிட்டுச் சென்றுள்ளனர்.

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரபலமான குத்துச் சண்டை வீரராக இருந்த போதிலும், அவருடன், சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற இரண்டு மெய்க்காவலர்கள் கூட இருந்த போதிலும், கொள்ளையர்களிடம் இருந்து தமது உடமைகளைக் காப்பாற்ற முடியவில்லை.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததால் தான், ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய, கொள்ளையர்களிடம் சிக்க நேரிட்டதாக, வெளிவிவகார அமைச்சு தகவல்கள் கூறுகின்றன.

இந்தச் சம்பவத்தின் போது, கொள்ளையர்களால் கொண்டு செல்லப்பட்ட கார், சிறிலங்கா தூதரகத்துக்கச் சொந்தமானது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கருத்து “கொள்ளையர்களிடம் உடமைகளைப் பறிகொடுத்த சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி”

  1. மனோ says:

    சிங்களவனுக்கும் வல்லவன் பிரேஸிலில் இரக்கிறானா? அடுத்த முறை நாம பிரேஸில் காரனைப் பிடிச்சுப் பார்த்தால் வெற்றி எமக்கேதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *