மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

ஜோன் கெரியிடம் மைத்திரி முன்வைத்த மூன்று கோரிக்கைகள்

ஊழல், மோசடி மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு, சிறிலங்கா அதிகாரிகளுக்கு பயிற்சி வசதிகளை அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணிலுடனும் பேச்சு நடத்தினார் ஜோன் கெரி

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று மதியம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.

உள்நாட்டு விசாரணைக்கு நிபுணத்துவ உதவி வழங்குமாறு அமெரிக்காவிடம் சிறிலங்கா கோரிக்கை

போருடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு தீர்வு காணப்படும் என்று, சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியிடம் சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் ஜோன் கெரி

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி  பயணம் செய்த  போயிங் 757 விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசிலுடன் அதுரலிய ரத்தன தேரர் ஐந்து மணி நேரம் இரகசியப் பேச்சு

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுடன், ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் நேற்று ஐந்து மணி நேரம் பேச்சு நடத்தியுள்ளார்.

சற்று நேரத்தில் கொழும்பை வந்தடைகிறது ஜோன் கெரியின் விமானம்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி சிறிலங்காவுக்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இன்றுகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார். அவர் பயணம் செய்யும் சிறப்பு விமானம் நேற்று  அதிகாலையில் வொசிங்டனில் இருந்து புறப்பட்டது.

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் திறந்துவைப்பு

உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை சிறிலங்காவில் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ரம்படகல்ல வித்யசாகர விகாரையில், அமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்திர் சிலையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை திறந்து வைத்தார்.

சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரதத்தில் குதித்தார் சோமவன்ச அமரசிங்க

ஜேவிபியின் முன்னாள் தலைவரும், அண்மையில் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறியவருமான சோமவன்ச அமரசிங்க கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

19வது திருத்தத்தை எதிர்த்தவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்துகிறது சுதந்திரக் கட்சி

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளிக்காத தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளது.

நாமல் ராஜபக்சவுக்கும் ஆப்பு வைத்தது 19வது திருத்தச்சட்டம்

2021ம் ஆண்டு நடைபெறும் சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில், ராஜபக்ச குடும்பத்தின் வாரிசான நாமல் ராஜபக்ச போட்டியிடும் வாய்ப்பை இழந்துள்ளார். 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், சிறிலங்கா அதிபர் தேர்தலில், போட்டியிடும் வேட்பாளரின் ஆகக்குறைந்த வயதெல்லை, 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.