தமிழ் அரசியல் கைதிகள் இன்று சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கின்றனர்
சிறிலங்காவின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இன்று முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

