மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவில் இன்று நடைமுறைக்கு வருகிறது 19வது திருத்தச்சட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் இன்று தொடக்கம், நடைமுறைக்கு வரவுள்ளதாக, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

சிகிரியாவில் கிறுக்கியதால் சிறை சென்ற மட்டக்களப்பு உதயசிறி இன்று காலை விடுதலை

பழமை வாய்ந்த சிகிரியா குன்றின் பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதி, அதனைச் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சித்தாண்டியைச் சேர்ந்த, சின்னத்தம்பி உதயசிறி என்ற இளம் பெண் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

19வது திருத்தத்தை நிறைவேற்றிய சிறிலங்காவுக்கு பிரித்தானியா பாராட்டு

19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில், சிறிலங்காவுக்கான புதிய பிரித்தானியத் தூதுவர், ஜேம்ஸ் டௌரிஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

’19’ஐ நிறைவேற்ற நாடாளுமன்றதில் நேற்று முழுவதும் மைத்திரி நடத்திய போராட்டம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதற்காக நேற்று முழுநாளும் நாடாளுமன்றத்திலேயே தங்கியிருந்தார்.

கடைசி நிமிடம் வரை இழுபறி – ஐதேக, கூட்டமைப்பு விட்டுக் கொடுத்ததால் தீர்ந்தது

சிறிலங்காவின் 19வது திருத்தச்சட்டத்தில், அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்திலேயே நேற்று கடைசிநேரம் வரை இழுபறி காணப்பட்டது. எனினும், பிடிவாதமாக இருந்த ஐதேகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடைசியில் இறங்கி வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

மூன்றாவது வாசிப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியது 19வது திருத்தச்சட்டம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றிரவு நடந்த குழுநிலை விவாதங்களுக்குப் பின்னர், 19வது திருத்தச்சட்டத்தின் மூன்றாவது வாசிப்பு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

215 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது 19வது திருத்தம்

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சிறிலங்கா அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டம் சற்று முன்னர்,  215 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

19வது திருத்தம் மீதான வாக்கெடுப்பு ஒரு மணிநேரத்துக்கு ஒத்திவைப்பு

சிறிலங்காவில் பெரும் பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச்சட்டம் மீதான வாக்கெடுப்பு ஒரு மணிநேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்மிரல் கரன்னகொடவின் இரகசியங்கள் விரைவில் வெளிவரும் – ரணில் விக்கிரமசிங்க

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்காலத்தில்  பல ஆதாரங்கள் வெளிப்படுத்தப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

துப்பாக்கியுடன் மைத்திரியை நெருங்கிய இராணுவ கோப்ரல் – நாமலிடமும் விசாரணை

அம்பாந்தோட்டையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு வளையத்தை, நாமல் ராஜபக்சவின் மெய்க்காவலர் துப்பாக்கியுடன் ஊடறுத்து நுழைந்த விவகாரம் குறித்து, நாமல் ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.