மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் அப்துல் கலாம்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாநிதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம், இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மகிந்தவை மைத்திரி சந்திக்கவில்லை – அதிபர் செயலகம் அறிவிப்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு பேச்சுக்களை நடத்தியதாக வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபர் செயலகம் மறுத்துள்ளது.

இராணுவத்தை வெளியேறக் கோரும் உரிமை விக்னேஸ்வரனுக்கு உள்ளது – நாடாளுமன்றில் சம்பந்தன்

வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் என்ற வகையில், தனது நிர்வாகத்தின் கீழுள்ள பகுதியில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று கூறுவதற்கும் அதனை வலியுறுத்துவதற்கும் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு அனைத்து உரிமையும் உள்ளது என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மைத்திரி – மகிந்த நேற்றிரவு சந்திப்பு – ஒன்றரை மணிநேரம் பேச்சு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்றிரவு சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

20ஐ நிறைவேற்றாமல் நாடாளுமன்றம் கலைக்கப்படாது – ராஜித சேனாரத்ன

தேர்தல் முறையை மாற்றியமைக்கும் 20ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையில், நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கோத்தாவின் குடியுரிமை பறிக்கப்படும்?

மிக்-27 போர் விமானக் கொள்வனவு தொடர்பாக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டால், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச குடியுரிமையை இழக்க நேரிடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பை பலவீனப்படுத்த சிறிலங்கா முயற்சி

நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்தி, விடுதலைப் புலிகளின் நிதி ஆதார வலையமைப்புகளைப் பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மூன்று நாள் பயணமாக அப்துல் கலாம் இன்று சிறிலங்கா வருகிறார்

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், பிரபல விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாம் மூன்று நாள் பயணமாக இன்று சிறிலங்கா வரவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் நள்ளிரவு கலைக்கப்படவில்லை – ஊடகங்கள் ஏமாற்றம்

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்படும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதற்கான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கூட்டமைப்புடன் மைத்திரி அவசர சந்திப்பு – அரசியல்தீர்வு குறித்து தொடர்ந்து பேச இணக்கம்

இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.