மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

மகிந்தவின் வீட்டில் மாற்று வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து வரும் நிலையில், தனியானதொரு வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் மகிந்த ஆதரவு அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மகிந்த அணியிடம் இரண்டு திட்டங்கள் – என்கிறார் விமல் வீரவன்ச

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என்றும், அவருடன் இணைந்து தேசிய சுதந்திர முன்னணியும் போட்டியிடும் என்றும் அந்தக் கட்சியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவு

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடத்தப்படவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு 4 பில்லியன் ரூபா செலவாகும் என்று சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக அமெரிக்க கண்காணிப்பாளர்கள்?

சிறிலங்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க, அமெரிக்காவில் இருந்து முதல்முறையாக கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படவுள்ளனர்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும், மைத்திரியுடன் பேச்சுத் தொடரும்- சம்பந்தன்

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஆரம்பித்துள்ள பேச்சுக்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், அந்தப் பேச்சுக்கள் அவரது தலைமையிலான அடுத்த அரசாங்கத்திலும் தொடரும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அஞ்சல் மூலம் வாக்களிக்க ஜூலை 14ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூலை 3ஆம் நாள் தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிறிலங்கா தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுதந்திரமான நீதி முறைமையை கொண்டுள்ளதாம் சிறிலங்கா – மெச்சுகிறார் இராணுவப் பேச்சாளர்

மிருசுவில் படுகொலை வழக்கில் இராணுவ அதிகாரியான சுனில் இரத்நாயக்கவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டமை, சுதந்திரமானதும், அசாதாரணமானதுமான நீதி முறைமையைக் கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலால் பிற்போடப்படுகிறது க.பொ.தஉயர்தரத் தேர்வு

சிறிலங்காவில் வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், க.பொ.த உயர்தரத் தேர்வுகளைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சிறிலங்காவின் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஓகஸ்ட் 17இல் நாடாளுமன்றத் தேர்தல் – 10 நாட்களில் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்

சிறிலங்காவின் ஏழாவது நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ள நிலையில், எட்டாவது நாடாளுமன்றத்தை தெரிவு செய்வதற்கான தேர்தல் ஓகஸ்ட் 17ம் நாள்- திங்கட்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு – நள்ளிரவில் வெளியாகிறது வர்த்தமானி அறிவிப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.