மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

தியத்தலாவ இராணுவ முகாமில் துப்பாக்கிகள் மாயம் – விசாரணைக்கு உத்தரவு

தியத்தலாவ இராணுவப் பயிற்சி முகாமில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த மூன்று துப்பாக்கிகள் காணாமற்போயுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மிகவிரைவில் நாடாளுமன்றம் கலைப்பு – உறுதி செய்தார் மைத்திரி

நாடாளுமன்றம் மிக விரைவில் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சுக்களின் செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்களைக் குறைக்கக் கூடாது – நாடாளுமன்றில் சம்பந்தன்

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை இன்னும் 15- 20 ஆண்டுகளுக்கு, ஒன்பதை விடவும் குறைக்கப்படாமல் இருப்பதை, புதிய தேர்தல் முறை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

புலம்பெயர்ந்தோர் ஒன்றும் கொம்புவைத்த வேற்றுக் கிரகவாசிகள் அல்ல- மங்கள சமரவீர

புலம்பெயர்ந்தவர்கள் ஒன்றும் வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்த கொம்பு வைத்த மனிதர்கள் அல்ல என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

அமெரிக்கா குறித்த அமெரிக்க அறிக்கையை தீவிரமாக கருத்தில் எடுக்க வேண்டும் என்கிறார் பீரிஸ்

விடுதலைப் புலிகளின் அனைத்துலக வலையமைப்பு இன்னமும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமான விடயமாக கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிலங்காவின் பாதுகாப்புக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தலாம் – எச்சரிக்கிறார் கோத்தா

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கு இன்னமும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

நாளை நள்ளிரவு கலைக்கப்படுகிறது சிறிலங்கா நாடாளுமன்றம்?

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை – 24ஆம் நாள்- நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்கவுள்ளதாக நம்பகமான வட்டாரங்களை மேற்கொள்காட்டி சிறிலங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் மீளாய்வு செய்யப்படும் – மங்கள சமரவீர

தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளின் பட்டியலை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கத்தை அமைக்க முடியாது – சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா சுதந்திர கட்சியினாலோ அல்லது வேறு எந்த கட்சியினாலோ, சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பெலியத்தையில் மகிந்தவுக்கு முடிவுகட்டுவேன் – ராஜித சேனாரத்னவின் மகன் சூளுரை

நாடாளுமன்றத் தேர்தலில் பெலியத்தை தொகுதியில் போட்டியிட முன் வருமாறு சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்குச், அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சவால் விடுத்துள்ளார்.