மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கொழும்பிலுள்ள பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கு லண்டனில் இருந்து வந்துள்ள எச்சரிக்கை

சிறிலங்கா விமானப்படையினரால் நடத்தப்படும் உள்நாட்டு விமான சேவையான ஹெலி ருவர்ஸ் விமானங்களில் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று, பிரித்தானிய இராஜதந்திரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஐந்து மத்திய குழு உறுப்பினர்களை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீவிர முயற்சி

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஐந்து பேரை, மத்திய குழுவில் இருந்து விரைவில் நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் தேர்தலை இடைநிறுத்தக் கோரிய வழக்குத் தள்ளுபடி

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள்  நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இடைநிறுத்தக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

மகிந்தவுக்கு நிதி உதவி வழங்கவில்லை – குற்றச்சாட்டை நிராகரிக்கிறது சீன நிறுவனம்

சிறிலங்காவில் கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலின் போது எந்தவொரு அரசியல்வாதிக்கும், தாம் நிதியுதவி வழங்கவில்லை என்று, சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு – ஐதேகவின் தேர்தல் வாக்குறுதி

அனைத்து தரப்பினரின் இணக்கத்துடன், ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வு மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது விரல்களைப் பாதுகாக்க சும்மா தள்ளிவிட்டேன் என்கிறார் மகிந்த

தனது கைவிரலைக் கெட்டியாக பிடித்துக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளவே அவரைச் சும்மா தள்ளி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

துறைமுகநகரத் திட்டத்தை நிறுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை – வெளிவிவகார அமைச்சு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு, சிறிலங்காவுக்கு இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக, வெளியான தகவல்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் நிராகரித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றில் மனு

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடும்படி கோரி, எமது சிறிலங்கா சுதந்திர முன்னணி என்ற அரசியல் கட்சியின் செயலர் சாகர காரியவசம், மேல்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கோத்தா படுகொலை முயற்சி – குற்றத்தை ஒப்புக்கொண்ட மைத்திரிக்கு 6 மாத சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைப் படுகொலை செய்ய முயன்ற வழக்கில், சிங்களவர் ஒருவருக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அக்குரஸ்ஸவில் ஆதரவாளரைத் தாக்கிய மகிந்த – காணொளி தீயாகப் பரவியதால் கலக்கம்

அக்குரஸ்ஸவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரையில், ஆதரவாளர் ஒருவரை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச ஆவேசமாகத் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களிலும், இணையத் தளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.