மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சலாவ வெடிவிபத்து – இராணுவத்தினர், பொதுமக்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஜப்பான் சென்றார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், நேற்றிரவு ஜப்பானின் நரிடா விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை – வாக்கெடுப்பை புறக்கணித்த இரு முக்கிய அமைச்சர்கள்

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், இரண்டு முக்கிய அமைச்சர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

நாட்டை நிதி நெருக்கடிக்குள் தள்ளினார் என்று குற்றம்சாட்டி, நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வி கண்டது.

நம்பிக்கையில்லாப் பிரேணையைக் குழப்பிய நாடாளுமன்ற ஒலியமைப்புத் தொகுதி

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் சமர்ப்பிக்கப்பட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வேந்தராக அட்மிரல் தயா சந்தகிரி

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக, சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் தயா சந்தகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தீவிபத்து தடுப்பு ஒத்திகையே சலாவ வெடிவிபத்துக்கு காரணம்?

கொஸ்கம- சலாவ சிறிலங்கா இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கு அங்கு நடந்த தீவிபத்து தடுப்பு ஒத்திகை காரணமாக இருந்திருக்கலாம் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஆயுதக் களஞ்சியங்களை இடம்மாற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை

கொஸ்கம மற்றும் வியாங்கொட ஆயுதக் களஞ்சியங்களை, சன அடர்த்தி குறைந்த பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு, அனுமதி கோரும், அமைச்சரவைப் பத்திரத்தை பாதுகாப்பு அமைச்சு சமர்ப்பிக்கவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

தொண்டர் படையினர் 70 ஆயிரம் பேரின் தனிப்பட்ட ஆவணங்கள் நாசம்

கொஸ்கம- சலாவ இராணுவ முகாமில் இருந்த சிறிலங்கா இராணுவ தொண்டர்படையைச் சேர்ந்த 70 ஆயிரம் படையினரின், தனிப்பட்ட ஆவணங்கள், நேற்றுமுன்தினம் நடந்த வெடிவிபத்தில் முற்றாக அழிந்து போயிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரித்தானிய இராஜதந்திரிகள் சம்பந்தனுடன் சந்திப்பு

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திரிகள் இருவர் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.