இந்த ஆண்டில் இந்தியாவுடன் எட்கா உடன்பாடு – சிறிலங்கா பிரதமர்
இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு இந்த ஆண்டில் கையெழுத்திடப்படும் என்ற சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு இந்த ஆண்டில் கையெழுத்திடப்படும் என்ற சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார், மடு பிரதேசதத்தில் உள்ள பாலம்பிட்டியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் பலவற்றை மீட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கான ஆலோசகராக ஹரீம் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் இருந்து ஹரீம் பீரிஸ் இன்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த 400 குடும்பங்கள், காங்கேசன்துறையில் சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான காணியில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 30 சதவீத இடமளிக்கும் வகையில், சிறிலங்காவின் மாகாணசபைகள் தேர்தல் சட்டம் திருத்தப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது.
மேல் மாகாண முன்னாள் ஆளுனரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான அலவி மெலானா இன்று மாலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 84 ஆகும்.
அனைத்துலக ஆதரவுடனேயே எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான பயணம் எனும் தொனிப்பொருளில் நேற்று பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கு கடலில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, உத்தரவிட்டுள்ளார்.
வடக்கில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் அகற்றப்படக் கூடாது என்று, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான, வண. வேரககொட சிறி குணரத்ன தேரர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து பிரிகேடியர்கள், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 2016 ஏப்ரல் 28ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.