மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்கா அரசுக்கு எதிரான பாதயாத்திரை – கண்டியில் பசில் இரகசியக் கூட்டம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் எதிர்வரும் 28ஆம் நாள் கண்டியில் ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரை தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.

நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார்?

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும், கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா அதிபர், பிரதமரைச் சந்தித்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

மூன்று நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறிவிட்டார் மங்கள சமரவீர – மகிந்த அணி குற்றச்சாட்டு

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மகிந்த ஆதரவு கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி மூன்று நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று பிற்பகல் சிறிலங்கா வந்தடைந்தார். சிறப்பு விமானத்தில், சீன வெளிவிவகார அமைச்சர் இன்று பிற்பகல் 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இராணுவமய சூழலில் இருந்து 2018இல் சிறிலங்கா முற்றாக விடுபடும் – மங்கள சமரவீர

2018ஆம் ஆண்டுக்குள், இராணுவமய சூழலில் இருந்து சிறிலங்கா முற்றாக விடுபட்டு விடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வடக்கில் சிங்களவர், முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு செயலணி – சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல்

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த சிங்கள, மற்றும் முஸ்லிம்களை மீளக் குடியமர்த்துவதற்கான செயலணி ஒன்றை உருவாக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

லசந்த படுகொலை – சந்தேக நபர்களின் படங்களை மீண்டும் வெளியிட்டது சிறிலங்கா காவல்துறை

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பேரின் மாதிரிப் படங்களை சிறிலங்கா காவல்துறை தலைமையகம் மீண்டும் வெளியிட்டுள்ளது.

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் ஜோர்ஜ் மாஸ்டர்

விடுதலைப் புலிகள் அரசியல்துறையில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய ஜோர்ஸ் மாஸ்டருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கை, கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனராக இன்று பொறுப்பேற்கிறார் இந்திரஜித் குமாரசுவாமி

சிறிலங்கா மத்திய வங்கியின் புதிய ஆளுனராக, கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று பதவியேற்கவுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்படவுள்ளது.