டாக்காவில் பணயம் வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மீட்பு
டாக்காவில் விடுதி ஒன்றில் ஆயுததாரிகளால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
டாக்காவில் விடுதி ஒன்றில் ஆயுததாரிகளால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வின் போது, தீர்மானம் 30/1 இன் பிரகாரம் அளிக்கப்பட்ட முக்கியமான உறுதிப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக காணப்படுகின்ற புதிய நிலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாகத் தெரிவித்துள்ளது.
பொறுப்புக்கூறலுக்கான நீதிப்பொறிமுறை விடயத்தில் அனைத்துலக பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு சிறிலங்கா அஞ்சவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிரணியினரால், புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டால் அதற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவே தலைமை தாங்குவார் என்று, தேசிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா நேரடியான தலையீடுகளை இனி மேற்கொள்ளாது என்று, புதுடெல்லியில் உள்ள இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கையெழுத்திடத் திட்டமிடப்பட்டுள்ள, எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டை, விரைவுபடுத்துவது தொடர்பாக புதுடெல்லியுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு, அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய கொள்கைகள் அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை சிறிலங்கா அரசாங்கம், இந்தவாரம் இந்தியாவுக்கு அனுப்பவுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் முன்னாள் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்காவின் மொத்த சனத்தொகையில் 23.4 வீதமானோர் புகைப்பழக்கமுள்ளவராக இருப்பதாக, சிறிலங்காவின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ கலாநிதி பாலித மகிபால தெரிவித்துள்ளார்.
புத்தளம் பாலாவியில், புதிய உள்நாட்டு விமான நிலையம் ஒன்றை அமைக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விமான நிலையக் கட்டுமானப் பணிகளுக்கு 750 மில்லியன் ரூபா செலவிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்காக, சிறிலங்கா அரசாங்கத்துடன் விரைவில் பேச்சுக்களை ஆரம்பிக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கான குழுவொன்றையும் நியமித்துள்ளது.