அனுராதபுர, கம்பகா மாவட்டங்களில் வாக்களிப்பில் அதிக ஆர்வம்
அனுராதபுர, கம்பகா மாவட்டங்களில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராதபுர மாவட்டத்தில், காலை 10 மணியளவிலேயே 40 வீத வாக்குகள் பதிவாகி விட்டதாக மாவட்ட தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
இங்கு, மகிந்த ராஜபக்ச அணியினருக்கும், மைத்திரிபால சிறிசேன அணியினருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலராக மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள, துமிந்த திசநாயக்க அனுராதபுர மாவட்டத்திலேயே போட்டியிடுகிறார்.
அதேவேளை, கம்பகா மாவட்டத்தில், காலை 11.45 மணியளவில் 48 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காலை 10 மணி நிலவரப்படி, வன்னி மாவட்டத்தில் 33 வீதமும், குருநாகல மாவட்டத்தில் 30 வீதமும், அம்பாறை மாவட்டத்தில் 25 – 30 வீதமும், யாழ் மாவட்டத்தில் 20 வீதமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 வீதமும், கேகாலை மாவட்டத்தில் 25 வீதமும், களுத்துறை மாவட்டத்தில் 23 வீதமும், காலி மாவட்டத்தில் 13 வீதமும் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.