13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருகிறார் சஜித்
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அழைப்பு விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சஜித் பிரேமதாச, இது இன சமூகங்களிடையே நல்லுறவை வளர்க்க உதவும் என்றும் குறிப்பிட்டார்.
வெவ்வேறு இனப் பின்னணியைச் சேர்ந்த மக்களைப் பெரும்பான்மை அல்லது சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்களாக வகைப்படுத்தக் கூடாது என்றும், மாறாக அவர்கள் அனைவரும் இலங்கையர்களாகச் சமமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் வாழும் இனக் குழுக்களைப் பெரும்பான்மை சமூகம் மற்றும் சிறுபான்மையினர் என்று நாம் குறிப்பிடாமல், அனைவரையும் இலங்கையர்களாகவே கருத வேண்டும்,” என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
