மேலும்

மனித உரிமைகள் ஆணையாளராக ஹேமமல் ஜயவர்தனவை நியமிக்க அங்கீகாரம்

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளராக கலாநிதி ஹேமமல் ஜயவர்தனவை நியமிப்பதற்கு, அரசியலமைப்புப் பேரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் பதவிக்கு, கலாநிதி ஜயவர்தன மற்றும் கலாநிதி ஜெஹான் பெரேரா ஆகியோர்  முன்மொழியப்பட்ட நிலையில், இருவரும் தலா நான்கு வாக்குகளைப் பெற்றனர்.

கலாநிதி ஜெஹான் பெரேராவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி.பெரேரா, எஸ்.சிறிதரன், சிவில் உறுப்பினர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோர் வாக்களித்தனர்.

அதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மற்றும் சிவில் உறுப்பினர் வசந்த செனவிரத்ன ஆகியோர் கலாநிதி ஜயவர்தனவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

வாக்குகள் சமநிலையில் இருந்த நிலையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன,   ஆதரவாக வாக்களித்ததன் மூலம், கலாநிதி ஜயவர்த்தனவை,  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பதவிக்கு  நியமிப்பதற்கான அரசியலமைப்பு பேரவையினால் ஒப்புதல் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *