மேலும்

ஈரானிய கப்பல்கள் குறித்து தேசிய, பாதுகாப்பு நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானம்

சிறிலங்கா கடல் எல்லைக்கு அருகே ஈரானியக் கப்பல்கள் வரும்போது, எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து , ​​தேசிய நலன்கள், பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர்  நளிந்த ஜயதிஸ்ஸ,

ஈரானியக் கப்பல்கள் தற்போது அனைத்துலக கடல் எல்லைக்குள் உள்ளனவே தவிர, சிறிலங்காவின் 12 கடல் மைல் எல்லைக்குட்பட்ட பிராந்தியக் கடல் எல்லைக்குள் இல்லை.

அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் விதிப்பதற்கான சாத்தியங்களை சிறிலங்கா பரிசீலிக்கும் , ஆனால் இரு தரப்பு அழுத்தத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுக்காது என்றும்  தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *