மேலும்

சிறிலங்காவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அமெரிக்க தளபதி பேச்சு

அமெரிக்க பசுபிக் இராணுவத்தின் பிரதி கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் “ஜேபி” வோவல், சிறிலங்காவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர , பாதுகாப்பு செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த  ஆகியோரை ​​தனித்தனியாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடந்த இந்த சந்திப்புகளின் போது, ​​சிறிலங்காவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், குறிப்பாக கூட்டுப் பயிற்சி, ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துதல், மற்றும் நெருக்கடிகள் மற்றும் புதிதாக உருவாகும் பாதுகாப்பு சவால்களுக்கு திறம்பட பதிலளிக்கும் திறனை மேலும் வலுப்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்தும், மேலதிக ஒத்துழைப்பிற்கான வழிகளை குறித்தும், இந்த சந்திப்புகளின் போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்புத் தூதுவர் டேவிட் மயர்ஸ், பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுஸ், மற்றும் அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க பசுபிக் இராணுவத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளும் இந்த சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *