மேலும்

ரஷ்யா- சிறிலங்கா இராணுவ கூட்டுப் பயிற்சி நிறைவு

சிறிலங்கா இராணுவத்தின் 20 அதிகாரிகள் மற்றும் 55 படையினரைக் கொண்ட குழுவினர், ரஷ்யப் படையினருடனான கூட்டுப் பயற்சியை நிறைவு செய்துள்ளனர்.

ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி கிராய் பகுதியில் அமைந்துள்ள 249-வது “செர்கியேவ்ஸ்கி”  கூட்டு ஆயுதப் பயிற்சிப் பள்ளியில், செப்டம்பர் 22 ஆம் நாள் முதல் 27 ஆம் நாள் வரை,  “வோல்வரின் பாத் II – 2026” (Wolverine Path II – 2026) என்ற இந்த கூட்டு இராணுவப் பயிற்சி இடம்பெற்றது.

இந்தப் பயிற்சி செயற்பாட்டுத் தயார்நிலை, தந்திரோபாயத் திறன் மற்றும் கூட்டுச் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது.

இதில் சிறிலங்கா மற்றும் ரஷ்யப் படைகள் இணைந்து கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகள், தந்திரோபாய துப்பாக்கிச் சூடு, தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள், தந்திரோபாய மருத்துவ முறைகள் மற்றும் ஆளில்லா வான்வழி அமைப்புகளின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டன.

பல்வேறு தந்திரோபாயச் சூழல்களில் இணைந்து செயற்படும் திறனை வளர்த்துக் கொள்வதோடு, செயற்பாட்டு அனுபவங்கள் மற்றும் பயிற்சி முறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்தப் பயிற்சித் திட்டம்,  வாய்ப்பளித்தது.

மேலும், ரஷ்யாவின் AK-12 தாக்குதல் துப்பாக்கிகளைக் கையாள்வதிலும் அவற்றைச் சுடுவதிலும் சிறிலங்கா படையினர் முதல் முறையாக  நேரடி அனுபவத்தைப் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *