சுரேஷ் சாலே இதய சிகிச்சைப் பிரிவில் அனுமதி
சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கொழும்பு தேசிய மருத்துவமனையின் இதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திடீர் இதயப் பிரச்சினைகளை அடுத்து அவர் இதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் சுரேஷ் சாலேயின் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே, உணவு உண்ண மறுத்து வருவதால், கடந்த பல நாட்களாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு குழாய் மூலம் உணவு வழங்கப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்தார்.
எனினும் சுரேஷ் சாலேயின் உடல் நிலை மோசமடைந்திருப்பதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
